Monday, March 7, 2011

தினம் ஓர் மகளிர் தினம்

செல்லப்புன்னகை கொண்டு மயக்கி,
மனம் கவர்ந்த மழலையாய்,

வெகுளியாய், ஆனந்தமாய், அழகாய்
குரும்புச்சேட்டைகளின் அரசியாய்,

வைரம் போன்ற ஒளியுடன்
தன்னை உணர்ந்த நங்கையாய்

உறவுகள் பல பெற்றும்
அவன் ஒருவனின் காதலியாய்

பொறுப்புகள் பல பெற்றும்
தலைவன் தோள்கொடுக்கும் தலைவியாய்

செல்வத்தின் செல்வமாம் மக்கட்செல்வம்
கண்டறிந்து பூரித்த அன்னையாய்

மக்கள் யாவரும் பிரிந்தபின்
கணவனின் உற்ற தோழியாய்

மறிக்கும் தருவாயிலும் தான்
இளமையில் பூரிக்கும் கிழவியாய்

பெண்ணே!
என் அன்னையாய் குழந்தையாய்
தங்கையாய் தோழியாய் தலைவியாய்
இன்னும் எத்தனையோ பரிமாணம்

உன் நினைவில் ஒருநாள் போதாது
வருடம் முழுதும் வாழ்த்துகிறேன்