Saturday, May 9, 2009

அம்மா- தமிழுக்கே இவ்வெழுத்து அழகு

கடலளவு மானுடம் நான் கண்டுள்ளேன்
வல்லவன் நல்லவன் பல முகம் கண்டுள்ளேன் 
யாவரும் என் உடன் பிறப்பென்பேன்
தனித்தே இவ்வுலகை ரசித்தேன்! 

தன் நலம் கானா உயிர் ஒன்றென்றால்
அவள் நம்மை பெற்ற தாய் அன்றோ!
அவளை நான் வணங்கி நின்றால்
புவியே என்னை வாழ்த்திடுமே!

வாழ்க்கை வளம் பெற வாழ்வை தந்து 
என்னைக்காக்க தன் உயர் மறந்து
தன் குறுதி கரைத்து என் உயர் வளர்த்து
என்னை தன்னாய் பார்த்தாயே!

என் சிரிப்பை அமுதாய் உண்டு
என் குறும்பில் களிப்பை கண்டு 
என் துயரை தீயால் எரித்து
என்னை வடிவடைத்தாயே!

பட்டங்கள் நான் பெற்றும்; சான்றோனாகினும்; 
உயரம் பல சென்ற பின்னும் 
உன் அன்பு மட்டும் போதும்!  
அமிர்தமும் வேண்டுமோ இதன் பின்னால் 

வாழ்கை துயரில் சிக்கித்வித்து 
செல்வம், நோய், உளைச்சல்களை போராடி
களைத்து விழும்போது -  
உன் மடி போல் மெத்தை ஏதுண்டு!  

இன்பம் தனை எனக்களித்து 
நாட்கள் பல நீ காத்து, கரைந்து - 
நான் நானாக, நீ பட்ட வலிக்கு 
நான் நன்றி சொல்லபோவதில்லை!

நீ படைத்தவன் நான் என்றாகினும் 
நான் என்னை நீயாக பார்க்க 
நான் நானாக இருப்பதும்,  நீ தந்த 
அந்த 'நான்' என்பதால் தான்.

- SK

1 comment:

  1. sabash, great way to say thanks though not saying it.
    Mother is always special to all...
    its more special when its also told in such a manner...

    ReplyDelete