உலகே வேண்டாம் என்று காடு சென்று
இறை தேடி சித்துக்களை கண்டு வென்று
மீண்டும் உலகம் வந்து இணைகின்றான்
சித்தன், சகிரவனை வாழ வைத்து
தான் வென்றதாய் சொன்ன மாயையை
மீண்டும் அணைத்துக்கொண்டு
மனிதனை மீண்டும் மாயையில் இணைக்கிறான்
பித்தனோ இவன், தான் கண்ட இறைவனை
ஏன் பிறர் காண வழி காட்டாமல்
பிறர் கண்ட வேதனையை தானும் கண்டு
அதை இதை எதை என்று பல செய்து
இறைவனை மறைத்தான், மாயையை வளர்த்தான்
பின் சிலையாய் மறைந்தான் .
இதுவும் இறை செயல்தனோ!
சொல்லும் ஐயா! என்னை ஆட்சி செய்யும் இறைவனே!!!
இறை தேடி சித்துக்களை கண்டு வென்று
மீண்டும் உலகம் வந்து இணைகின்றான்
சித்தன், சகிரவனை வாழ வைத்து
தான் வென்றதாய் சொன்ன மாயையை
மீண்டும் அணைத்துக்கொண்டு
மனிதனை மீண்டும் மாயையில் இணைக்கிறான்
பித்தனோ இவன், தான் கண்ட இறைவனை
ஏன் பிறர் காண வழி காட்டாமல்
பிறர் கண்ட வேதனையை தானும் கண்டு
அதை இதை எதை என்று பல செய்து
இறைவனை மறைத்தான், மாயையை வளர்த்தான்
பின் சிலையாய் மறைந்தான் .
இதுவும் இறை செயல்தனோ!
சொல்லும் ஐயா! என்னை ஆட்சி செய்யும் இறைவனே!!!