Showing posts with label Devine. Show all posts
Showing posts with label Devine. Show all posts

Saturday, August 8, 2015

வேண்டாம்

வாலிபத்தின் தேடலில்
கண்டான் ஆடவன் மாதுவை
காதல் என்றான் காமம் என்றான்
களிப்பில் காதல் செய்தபின்

விந்துகள் சில கோடி
சிந்தி அதில் ஒன்றாய்
மொட்டினை நுகர்ந்து அதை
மலராய் மலரச் செய்தான்

மாதங்கள் ஒன்பதினை கடக்க
கண் காது தலை
இருதயம் நுரை என
கை கால்களும் வளர்ந்து

தன் கூடிணை கிழித்து
மண் என்ற மாயையில்
காலம் கணிதம் என
பல கணக்கினை கொண்டு

பல புன்னகை இடையே
கண்ணீருடன் ஓ என்று ஒலித்து
முதல் சுவாசத்தை கொண்டு
தன் பயணத்தை தொடங்கினான்

இன்பம் துன்பம் தெரியா
கேளிக்கை விளையாட்டு வெளையாடி
உறவுகள் சூழ மகிழ்ந்து
புது நட்பினை கொண்டு

பருவ ம் வந்தபின்
கல்வி கரை கண்டு
அறிவோனாய் புகழப்பெற்று
பேரும் புகழும் சூழ

வாலிபத்தின் வாசனை அறியா
உணர்வும் மொழியும்  புரியா
உடலின் மாயையில் சிக்கி
காமத்தில் மூழ்கி தவிக்க

மாற்றாள் ஒருத்தியை கண்டு
மயங்கி காதல் செய்ய
உடலும் உணர்வும் இணைந்து
காமம் தீர கலந்து

காலமும் விரையச்செல்ல
இளமை நீங்க நரை தோன்றி
பார்வை மங்கி செவிகள் தளர்ந்து
உணர்வுகள் மரத்து அழகும் சிதைந்து

துணையும் நீங்க துணையாய்
கொள் ஒன்றுமட்டும் கொண்டு
நிமிரவும் வழி இல்லா
கூனாய் நகர்வான் கிழவன்

காதல் இசைத்த மொழி
மறந்து  அறிவும் மங்கி
வாய் குளறி கழிவும்
சிந்த துணை கேட்பான்

வார்த்தைகள் பேசிய வாயும்
வழி காட்டிய கைகளும்
ஆட்சி செய்த அறிவும்
உயிரினை காத்த உறுப்பும்

மெலிதாய் நொந்து சுருங்கி
இவன் இனி வேண்டாம் என
விலகிச்செல்லும் நாள் அன்று
ஆசையாய் இவன் நேசித்து

காத்து வளர்த்த மயிரும்
உடல் அழகும் காதலும்
காமமும், கொண்ட பொருளும்
இன்று ஒன்றாய் சூழ்ந்திருக்க

இவனோ வெறும் கூடாய்
உயிரும் உணர்வும் அற்று
அவன் இன்றி அதுவாய்
அழுகும் பிணமாய் கிடப்பான்

மனைவியோ தானும் பிணம்
என்பதறியா இவனைத் தொலைத்தோம்
என்று கதற சுற்றார்
மௌனத்தில் இவன் புகழ் பேசி

மைந்தனுடன் மீண்டும் ஒருமுறை
இறுதியாய் ஒரு பயணம் செல்ல
பயணம் முடிந்தபின் சிதையில்
தீயால் உண்ணப்பட்டு

எலும்பும் சதையும் தான்
என்று இருந்த அவன்
வெறும் சாம்பல் என்றாகி
அதுவும் இன்றி நீரில் கரைந்து

கானா பல உலகம்
காண செல்வான்
உடல் இழந்து உணர்விழந்து
ஆசை காமம் சிக்கி

திரும்ப முடிய வாழ்கை
முடிவில் ஏதும் இல்லா
ஒரு நொடியில் மறையும்
வாழ்க்கைக்கு

இத்தானை கூத்து ஏன்
பற்றறுத்து ஓட வழி அறியா
வாழ்கை ஏன்
ஏதும் வேண்டாம் 

Thursday, November 27, 2014

காணாத கண்

கண்டவற்றை காண கண் இருந்தும்
காணாத ஓர் பொருள் நோக்க

மனத்தால் பெற்ற பழியை
கலங்கா நினைவு துடைக்க

வழிதான் தேடிச்சென்றும்
அறிவால் நின்றது தான் கலக்கம்

கண்கொண்டு கண்ட மாயை விலக
கண் இன்றி காண்பதே மெய்யாம் 

Saturday, November 22, 2014

எங்கோ தேடினேன்

அவனோ கண்டதையும் கண்டு
பின் கானா  இடம்  சென்றிருக்க
அவனை  எங்கே  தேடுவேன்

யாத்திரைகள்  பல  சென்று
கோ இல் பல தேடி
யோகம் பல கற்று
மந்திரங்கள் பல செய்து
நோன்புகள் பல கொண்டு
மூச்சையும் நன்கடக்கி
துறவும் ஏற்பட்ட பின்
காண இடம் அதை
எங்கே தேடுவேன்

செல்லா இடம் நோக்கி
செல்லும் பாதை கண்டபின்
சொல்லா வியப்பில் கண்டேன் கண்டேன்
யாதும் அவன் என்றால்
இடம் அது ஒன்றில்லை
பின் நானும் நான் இல்லை

Friday, November 21, 2014

ஒன்றில் கறைந்தேன்

சிலநாள் காத்திருந்தேன்
பலநாள் காத்திருந்தேன்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
பல திசை தேடினேன்
ஒரு நாள் ஓர் திசை 
உள் திசை சென்று
உந்தன் இசை கேட்டு
கொண்டேன் ஓர் ஆசை
அனைத்தும் மறந்தேன்

ஒன்றில் கறைந்தேன்

Wednesday, August 15, 2012

மதி கொன்று விதி வெல்வோம்


இறை தேட வந்தோமையா, இன்னும் ஏன்
நீ தந்தவற்றை தேடி அலைகிரோமோ!
விதியாய் நீ கொண்ட நாடகத்தை நான் 
சுமந்தேனே என்ற ஆணவத்தை
அழிதுவிடும்போது பிறந்ததோர் ஞானம்.
இறை சூட்சமம் அறிய வேண்டாம் ஐயா
என்னுள் நான் என்னை நீயாக காண வேண்டும் ஐயா 

Saturday, July 28, 2012

சித்தனாய் போனபின்னும் பித்தன் ஆவான்

உலகே வேண்டாம்  என்று காடு சென்று
இறை  தேடி சித்துக்களை கண்டு வென்று 

மீண்டும் உலகம் வந்து  இணைகின்றான்
சித்தன், சகிரவனை  வாழ  வைத்து 

தான்  வென்றதாய் சொன்ன  மாயையை 
மீண்டும்  அணைத்துக்கொண்டு 
மனிதனை மீண்டும்  மாயையில்  இணைக்கிறான்

பித்தனோ  இவன், தான்  கண்ட  இறைவனை
ஏன்  பிறர்  காண  வழி  காட்டாமல்

பிறர்  கண்ட  வேதனையை  தானும்  கண்டு
அதை  இதை  எதை என்று பல செய்து

இறைவனை  மறைத்தான், மாயையை  வளர்த்தான்
பின்  சிலையாய்  மறைந்தான் .

இதுவும்  இறை  செயல்தனோ!
சொல்லும்  ஐயா! என்னை  ஆட்சி  செய்யும்  இறைவனே!!!

Friday, April 22, 2011

ஏன் இத்தனை கேள்வி

இருந்தாலும் மறைந்தாலும் நீயும்
நானும் அதுவாகவே இருக்க
அவனே வந்தாகினும் ஏதும் மாறப்போவதில்லை
விதியின் வழிதான் நாடகம் என்றபின்
முடிந்த பின்னும் ஒன்றும் விளங்கப்போவதில்லை!
ஏன் வாழும்போது மட்டும் இத்தனை கேள்வி.

Sunday, December 5, 2010

கிறுக்கன்

நான் என்ற பொருளின் பொருள் உணர
ஈசனாய் எறிந்து மாயனாய் மறைந்து
பரம் பொருளே இவன் என்றானோம்
நானும் இல்லை நாணும் இல்லை
வெறும் கதை, இதன் பொருள்
உணர்வாயே செம்மனமே

இவன் எது அவன் எது
எல்லாம் உன்னது ஆனது பின்
நான் எது; எல்லாம் நீ
என்பால் நாணும் இல்லை
எல்லாம் நீயன்றி ஏதுண்டு

காமப்பொருள் காண்பாய்
கருமப்பொருள் காண்பாய்
கருவின் பொருள் காண்பாய்
திருவின் பொருள் காண்பாய்
காணும் வேளையில் அனைத்தும்
மறை பொருளே என்றுணர்ந்து
மனம் அது செம்மை ஆனபோதும்
எல்லாம் ஓர் பொருள் என்பாய்.
இன்னும் பொருள் காணேனே
உணர்வற்ற போதும் உணரேனே
இவன் பொருளற்ற நிலைகாண
விழி திறப்பாயோ.

அவன் வேண்டும் இவன் வேண்டுமென
அனைத்தும் வேண்டுமென்பேன்
இன்று அவனும் வேண்டாம்
வேறெதுவும் வேண்டாம், யாவும்
அவன் என்றாகின் இங்கு
நான் இல்லை என்றாதலின் பின்
வேண்டும் எனபது யாருடையதோ
பொருளே இல்லாத பின்
இது அது ஏதும் இல்லையோ.

பொருள் உண்டென்ற மாயை
உணர நான் இங்கில்லை- பின்
உணரல் யாருடையதோ அவனே
நானாகி கருமம் செய்வித்து
விடை கான் என்கின்றான் அவன்;
இவன் இல்லை நான் இல்லை
எல்லாம் அவன் இல்லால்
வேறொன்றும் இல்லை.

Monday, November 15, 2010

பிறந்த நாள்

மாற்றம் என்பதின் அளவுகோல் வயது
அதன் பொருளோ எண்ணுபவன் கையில்
எண்ணிக்கையை விட்டு விட்டு
என்றும் அவன் புகழினை போற்றி
வாழ வாழ்த்துகிறான் வேந்தன்

Age is but the mere count of the changes in you.
What he interprets it as, is his own choice
Than counting the numbers
Praise the Lord for what HE is to you
Is all what HE wants from you

Thursday, February 25, 2010

அஹம் பிரம்மாஸ்மி

ஆதி முதல் அந்தம் வரை
அனைத்தும் உன் ஒளியாய் இருக்க

என் மனம் இருளில் சிக்கி நிற்குமோ ?


என்னுள் இருக்கும் நீ ஒளியாகின்

என் பயம் நீக்க மருந்தேதும் தேவையோ?

அணைத்தும் நீ என்றபின்

நான் என்று ஒன்றில்லை - என்றாகி

நான் செயலற்றவன், சக்தியும் அற்றவன்


உன் துளியில் ஒரு அதிசயம்

நான்என்பதால்தானோ நீ

என் மூலமாய் உன்னையே

அதிசயிதுக்கொள்ளும் -- அஹம் பிரம்மாஸ்மி

Sunday, May 10, 2009

அவள் நினைவில்

உன் முகம் காணும் பொது ஏன் மனம் கலங்கும் 
உன் விழிகள் என்னை வசப்படுத்தும் 
என் விழிகள் நின் அழகை ரசிக்கும்
நின் நினைவில் என் துயர் கரையும்

என்னை கொள்ளை கொண்ட பூரண ஜோதியே
நின்னை எண்ணி சரணடைந்துவிட்டேன்
என்னை கவர்ந்த முழு மதியே
உன்னில் என்னைக்கான்கிறேன்

நின் பதம் பொற்பதம் - அதை
சேருமே என் மனம் 
உன்னில் கரையும் காலம் அது
என் பயணத்தின் பொற்காலம்

உன்னில் மட்டுமே என் நினைவை கொண்டு
தவத்தின் சிகரம் எட்டி - கரைவேன்!
உன்னை அடையும் காலம் என்று? 
மீனாக்ஷி! நீ அறியததுண்டோ!

Monday, September 8, 2008

Seeking Bliss

Day or Night I shant sleep;
I wait for Thy Devine - To Enter
And heal my soul!
Starved for Thy Love 
Never to disobey the truth.
Thy LOVE the elixer of my life
The Greatest shall bow to Thee - Might One
Beauty is what you are-
Waiting for that moment
Of my Convergence with Thee.