Thursday, November 27, 2014

காணாத கண்

கண்டவற்றை காண கண் இருந்தும்
காணாத ஓர் பொருள் நோக்க

மனத்தால் பெற்ற பழியை
கலங்கா நினைவு துடைக்க

வழிதான் தேடிச்சென்றும்
அறிவால் நின்றது தான் கலக்கம்

கண்கொண்டு கண்ட மாயை விலக
கண் இன்றி காண்பதே மெய்யாம் 

Monday, November 24, 2014

அவனும் அவளும்

நீரினில் சிக்கி மரணிக்கும் எறும்பை
காகக்கொன்றாள் ஒரு இலையை
துடித்தால்தான் உயிர் என்று அவள் நினைக்க
அவள்  நினைவில் நித்தம் துடித்தான்

ஒற்றை நாளில் மறிக்கும் மலரை
அரவணைத்த  அவளின் அன்பிற்கு
என்றும் அவள் நினைவில் வாழும் அவனை
அடையாளம்  காணத் தெரியவில்லை 

Saturday, November 22, 2014

எங்கோ தேடினேன்

அவனோ கண்டதையும் கண்டு
பின் கானா  இடம்  சென்றிருக்க
அவனை  எங்கே  தேடுவேன்

யாத்திரைகள்  பல  சென்று
கோ இல் பல தேடி
யோகம் பல கற்று
மந்திரங்கள் பல செய்து
நோன்புகள் பல கொண்டு
மூச்சையும் நன்கடக்கி
துறவும் ஏற்பட்ட பின்
காண இடம் அதை
எங்கே தேடுவேன்

செல்லா இடம் நோக்கி
செல்லும் பாதை கண்டபின்
சொல்லா வியப்பில் கண்டேன் கண்டேன்
யாதும் அவன் என்றால்
இடம் அது ஒன்றில்லை
பின் நானும் நான் இல்லை

Friday, November 21, 2014

ஒன்றில் கறைந்தேன்

சிலநாள் காத்திருந்தேன்
பலநாள் காத்திருந்தேன்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
பல திசை தேடினேன்
ஒரு நாள் ஓர் திசை 
உள் திசை சென்று
உந்தன் இசை கேட்டு
கொண்டேன் ஓர் ஆசை
அனைத்தும் மறந்தேன்

ஒன்றில் கறைந்தேன்