நீ அருகே இல்லாத காலங்களில் என் கண் கலங்குகிறது
என் கண்ணீர் கூட உன்னை தேடுகிறது
என் கண்ணுள் வாழும் தேவதை நீ
அதனால் தான் கண் மூடாமல் இருக்கிறேன்
இருள் என்றல் பயம் என்றாயே அன்று...
காலம் கடல் என்றால் அதன் ஒவ்வொரு துளியும் உணதாக்குவேன்
காலம் நீர் துளி என்றல் அது விழும் ஒவ்வொரு கடலையும் உணதாக்குவேன்
என் கோபம் தீர்க்கும் மருந்தை நீ கொண்டாயே
உன் ஒரு புன்னகையில் என்னை வென்று விட்டாயே
ஒரு நாள் முழுதும் உன்னுடன் வாழ நினைக்கிறேன்
என் வாழ்னாலே ஒரு நாளாகட்டும்
நாளை வரை நான் வாழ விரும்பவில்லை
இரவில் மட்டும் தான் உன் குரல் கேட்க முடியும் என்றல்
என் வாழ்வே இறுளாகட்டும் – என் ஒளியாக நீ இரு...
நீ இறகில்லாத தேவதையா அல்லது
அந்த தேவதைகள் இரகுள்ள நீயா - சொல்.