Saturday, August 30, 2008

அவள் மேல் நான் கொண்ட காதல்

பெண் என்பவள் மலர் தானோ
உன் பேச்சில் தேனின் இனிமை
உன் வாசத்தில் சொக்கும் வண்டு - நான்

மீன் அல்ல உன் கண்கள் - ஏனெனில்
தூண்டில் போடுமொ மீன்கள்.

தாலாட்டி தூங்கவைத்தவள் தாய் - நீ
என் தூக்கம் கலைத்த தீ - அல்ல
நீர் ஓடை நீ.

நான் அழுவதிலும் சுகம் காண்கிறேன்
நீ ஆறுதல் சொல்ல உள்ளாய் என்று

கடலில் மூழ்கி முத்தெடுத்து
மாலையாய் உனக்கு சூடதவந்தேன்
பிறகே தெரிந்தது நான் எடுத்தது
உன் சிரிப்பில் சிந்தியவை என்று.

பிழைகள் திருத்த ஆசைதான்
ஆனால் நீ செய்யும் பிழைகளை
படிக்க மட்டுமே ஆசை.
உன் மடல்களை தீண்டுகையில் உன்னை
தொடிகின்ற பிரம்மை.

பொமியின் தாகம் தீர்ப்பவள் கங்கை
என் மோகத்தை தீர்க்கும் மங்கை - நீ
என் ஆகாய கங்கை.

ரதியில் மயங்கிய மன்மதன் அல்ல - நான்
உன்னி மட்டும் மயங்கிய ராமன்.

உன் வருகைக்கு காத்தது இருபது ருடம்
வந்ததும் உணர்ந்தேன் அது வெறும் இருபது நிமிடம்.

தனிமையில் நான் பேசும் மொழி - மௌனம்
நீ உறங்குகையில் அது உன் அருகே காத்துயிருக்கும்
ஏனெனில் தனிமையிலும் நான் பேசுவது
அன்பே உன்னோடுதான்.

நீ சிந்திய கண்ணீரில் சிதைந்தது
என் மனம் மட்டும் தான் - ஏனெனில்
அது விழுந்தது பறையாக என் இதயத்தில்.

இனிய பாடல்கள் கேட்கயில்
என் மனம் அமைதி அடையும் - அதனால் தானோ
நீ பேசும்போதெல்லாம் நான் அமைதி அடைகிறேன்.

அலைகள் என்னை தீண்டும் போது ஒரு பரவசம்
அது உன் கூந்தல் என்று நான் உணர்ந்த பின்பே.

துடித்தால் தான் வாழமுடியும் என்றால் என்
இதயம் துடிக்காமல் போகட்டும்.
நீ துடித்து நான் வாழ நான் அறக்கன் அல்ல.

திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் என் மூச்சை
வெளிவிடுகிறேன் - கண்ணே வெகுநேரம்
காத்திருக்க வைக்காதே.
உடன் இறுக்கயில் என் உயிராயிரு பிரிவில்
என் சுவாசமாய் மட்டும் இரு.

மடல் முழுதும் உன் பெயரை மட்டுமே
எழுத முடிந்தது - நான் எழுத நினைத்தது
என் மனத்தில் உள்ள நினைவு மட்டும்தான்

என் மனத்தில் உள்ளானவற்றை எழுத நினைத்தேன்
அதனால்தான் மடல் முழுவதும் உன்
பெயரை மட்டும் எழுத முடிந்தது.

உன் இதழில் தேன் சுரக்கிறதோ என் ஐயம்
நீ அனுமதி கொடுத்தல் அதை சுவைத்து
தீர்த்துக்கொள்வேன் - தருவாய் தானே.

உன் மேல் எனக்கொரு கோபம் உண்டு
எனக்கென்று பிறந்து இத்தனை யுகங்கள்
என்னை பிரிந்திருத்த காரணத்தால்.

உன் மார்பில் துடிப்பது உன் இதயமா அல்ல நான்
என்பதை மறைக்கததான் அணிந்தாயோ
அந்த மாறாப்பு சேலையை.

உனக்கும் எனக்கும் இடையே இடைவேளை
கூடாதென்றுதானோ உன்
இடையை கூட வருத்தி சுருக்கினாய்

உன்னை அலங்கரிக்க மலர்கள் தேடி வந்தேன்
நந்தவணமாய் நீயே நின்றா!
உன்னில் எதை நான் பறிக்க.

-SK

0 comments:

Post a Comment