Sunday, December 5, 2010

கிறுக்கன்

நான் என்ற பொருளின் பொருள் உணர
ஈசனாய் எறிந்து மாயனாய் மறைந்து
பரம் பொருளே இவன் என்றானோம்
நானும் இல்லை நாணும் இல்லை
வெறும் கதை, இதன் பொருள்
உணர்வாயே செம்மனமே

இவன் எது அவன் எது
எல்லாம் உன்னது ஆனது பின்
நான் எது; எல்லாம் நீ
என்பால் நாணும் இல்லை
எல்லாம் நீயன்றி ஏதுண்டு

காமப்பொருள் காண்பாய்
கருமப்பொருள் காண்பாய்
கருவின் பொருள் காண்பாய்
திருவின் பொருள் காண்பாய்
காணும் வேளையில் அனைத்தும்
மறை பொருளே என்றுணர்ந்து
மனம் அது செம்மை ஆனபோதும்
எல்லாம் ஓர் பொருள் என்பாய்.
இன்னும் பொருள் காணேனே
உணர்வற்ற போதும் உணரேனே
இவன் பொருளற்ற நிலைகாண
விழி திறப்பாயோ.

அவன் வேண்டும் இவன் வேண்டுமென
அனைத்தும் வேண்டுமென்பேன்
இன்று அவனும் வேண்டாம்
வேறெதுவும் வேண்டாம், யாவும்
அவன் என்றாகின் இங்கு
நான் இல்லை என்றாதலின் பின்
வேண்டும் எனபது யாருடையதோ
பொருளே இல்லாத பின்
இது அது ஏதும் இல்லையோ.

பொருள் உண்டென்ற மாயை
உணர நான் இங்கில்லை- பின்
உணரல் யாருடையதோ அவனே
நானாகி கருமம் செய்வித்து
விடை கான் என்கின்றான் அவன்;
இவன் இல்லை நான் இல்லை
எல்லாம் அவன் இல்லால்
வேறொன்றும் இல்லை.

0 comments:

Post a Comment