Tuesday, August 4, 2020

கொரோனா கதறல்கள்

இயந்திரங்களின் கலவர கர்ஜனை சூழ 
கொன்றை மலர் வாசம் ஏந்தி 
என்னைத் தழுவிய வாடை தென்றலால் 
மீண்டும் ஒரு முறை கண்விழித்தேன்!

ஆதவனோ மோகத்துடன் கண்ணாமூச்சி ஆட 
என் கண்களும் சோர்வில் தள்ளாட 
மதி மயங்கின் உடல் சுருண்டு 
இருந்த அறையிலே துலைந்து போனேன்!

கனவுகளும் பெரிதாய் ஒன்றும் இல்லை 
அடுத்த ஆதி வைக்க மனமில்லை 
என்ன செய்வது என்றும் புரியவில்லை 
மனக்கிளர்ச்சியால் தடுமாறி மீள முடியவில்லை!

இதுபோல் நாட்கள் மெல்ல செல்ல 
செய்வது யாதென நானும் அறியேன் 
பின் அறிவு நீங்க பெற 
செய்வது யாதும் அவன் என்றேன்!

உயிர்க்கொல்லி நிச்சியம் உலகெங்கும் பரவிட 
உயிர் உள்ளதே அது போதும் 
என்று பலரும் திகைத்துப் போனபின்னும் 
கனவு கலையும் காலம் வருமோ!

என்னை நானும் தொலைத்தேன் என்பேனோ 
என் இறைவனை தேட முனைவேனோ 
அறுவம் ஆனா இறைவன் கால்பற்றா 
அறுவமாய் நாச்சியனாய் அவனே வந்தானே!

என் இயலாமை எனக்குநர்த்த மீண்டும் 
என் கர்வம் தொலைக்க மீண்டும் 
அவன்வசம் மீள இதனை கூத்தும்  
அவனே செய்யும் பெரும் கருணையன்றோ!

கடலில் தத்தளிக்கும் படகின் மேல் 
துடுப்பாய் உன்னை பற்றி சரணடைந்தோம் 
உடுப்பை இந்த உடல் நீங்கி 
என் உயிராய் நின்றவனே போற்றி!

Saturday, December 29, 2018

குரு மழை

தேகத்தின் களைப்பு தீர
மெத்தை சுகம் கொண்டு
கனவுலகில் களிப்புற்றிருக்க
வந்தாளே அவள் மெல்ல

தென்றலுடன் அவள் மிதக்க
மனம் சிலிர்க்கும் மணத்துடன்
காமம்  களம் இறக்கி
மெல்லிசையாய் கால் பதித்து

காதலில் கை பிடிக்க
ஓடி வந்த என்னை
ஏமாற்றிச் சென்றாயடி மழையே
என் தூக்கம் தொடர்கிறேன் அடி

Tuesday, August 23, 2016

யார் பிறந்தார்?

நதியின் வழி சென்று கடலை சேர்ந்தோம்
விதியின் வழி சென்று மரணம் கண்டோம்

தோன்றியொன் யாரென்று அறியா நிலையில்
பிறந்தோம் என்று கூச்சலிட நான் யார்

அறிவின்  ஆசையே வாழ்க்கை எனக்கண்டு
மனதின் போக்கில் வீதியில் தொலைந்தோம்

பிறப்பே மாயை ஆனபின் மரணமும் பொய்யோ
அறிவும் பொய்யானபின் அனைத்தும் பொய்யோ

பொய்யான பிறப்பை கொண்டாடிக்  களிக்க
மெய்யான பிறப்பென்று ஏதும் உண்டா 

Saturday, August 8, 2015

வேண்டாம்

வாலிபத்தின் தேடலில்
கண்டான் ஆடவன் மாதுவை
காதல் என்றான் காமம் என்றான்
களிப்பில் காதல் செய்தபின்

விந்துகள் சில கோடி
சிந்தி அதில் ஒன்றாய்
மொட்டினை நுகர்ந்து அதை
மலராய் மலரச் செய்தான்

மாதங்கள் ஒன்பதினை கடக்க
கண் காது தலை
இருதயம் நுரை என
கை கால்களும் வளர்ந்து

தன் கூடிணை கிழித்து
மண் என்ற மாயையில்
காலம் கணிதம் என
பல கணக்கினை கொண்டு

பல புன்னகை இடையே
கண்ணீருடன் ஓ என்று ஒலித்து
முதல் சுவாசத்தை கொண்டு
தன் பயணத்தை தொடங்கினான்

இன்பம் துன்பம் தெரியா
கேளிக்கை விளையாட்டு வெளையாடி
உறவுகள் சூழ மகிழ்ந்து
புது நட்பினை கொண்டு

பருவ ம் வந்தபின்
கல்வி கரை கண்டு
அறிவோனாய் புகழப்பெற்று
பேரும் புகழும் சூழ

வாலிபத்தின் வாசனை அறியா
உணர்வும் மொழியும்  புரியா
உடலின் மாயையில் சிக்கி
காமத்தில் மூழ்கி தவிக்க

மாற்றாள் ஒருத்தியை கண்டு
மயங்கி காதல் செய்ய
உடலும் உணர்வும் இணைந்து
காமம் தீர கலந்து

காலமும் விரையச்செல்ல
இளமை நீங்க நரை தோன்றி
பார்வை மங்கி செவிகள் தளர்ந்து
உணர்வுகள் மரத்து அழகும் சிதைந்து

துணையும் நீங்க துணையாய்
கொள் ஒன்றுமட்டும் கொண்டு
நிமிரவும் வழி இல்லா
கூனாய் நகர்வான் கிழவன்

காதல் இசைத்த மொழி
மறந்து  அறிவும் மங்கி
வாய் குளறி கழிவும்
சிந்த துணை கேட்பான்

வார்த்தைகள் பேசிய வாயும்
வழி காட்டிய கைகளும்
ஆட்சி செய்த அறிவும்
உயிரினை காத்த உறுப்பும்

மெலிதாய் நொந்து சுருங்கி
இவன் இனி வேண்டாம் என
விலகிச்செல்லும் நாள் அன்று
ஆசையாய் இவன் நேசித்து

காத்து வளர்த்த மயிரும்
உடல் அழகும் காதலும்
காமமும், கொண்ட பொருளும்
இன்று ஒன்றாய் சூழ்ந்திருக்க

இவனோ வெறும் கூடாய்
உயிரும் உணர்வும் அற்று
அவன் இன்றி அதுவாய்
அழுகும் பிணமாய் கிடப்பான்

மனைவியோ தானும் பிணம்
என்பதறியா இவனைத் தொலைத்தோம்
என்று கதற சுற்றார்
மௌனத்தில் இவன் புகழ் பேசி

மைந்தனுடன் மீண்டும் ஒருமுறை
இறுதியாய் ஒரு பயணம் செல்ல
பயணம் முடிந்தபின் சிதையில்
தீயால் உண்ணப்பட்டு

எலும்பும் சதையும் தான்
என்று இருந்த அவன்
வெறும் சாம்பல் என்றாகி
அதுவும் இன்றி நீரில் கரைந்து

கானா பல உலகம்
காண செல்வான்
உடல் இழந்து உணர்விழந்து
ஆசை காமம் சிக்கி

திரும்ப முடிய வாழ்கை
முடிவில் ஏதும் இல்லா
ஒரு நொடியில் மறையும்
வாழ்க்கைக்கு

இத்தானை கூத்து ஏன்
பற்றறுத்து ஓட வழி அறியா
வாழ்கை ஏன்
ஏதும் வேண்டாம் 

Saturday, April 4, 2015

வேண்டுதல்

வேண்டுதல் வேண்டும்முன் வேண்டுமா என்றுணர
வேண்டுதலை தந்தவன் கால் பற்றி
வேண்டுதலை நீ அறிந்தபின்னும் வேண்டுவனோ
யாதும் கருணையால் சத்தியம் செய்வீரே 

Tuesday, December 23, 2014

ஒரு தலை ராகம்

அவளைப் பிடித்ததால் தான் நெருங்கினேன்
அவளோ சிணுங்கக்கூட இல்லை

கணவில் அவள் என்னை தருவியபோது
கிடைத்த கிளர்ச்சியை விட

அவள் அறியாது சீண்டிய அவள்
கூந்தல் எந்தன் உயர் குலைத்ததே

நீ சொல்லாத பல காதல் கவிதைகள்
கேட்டதுபோல் நான் பாடினேன்

அன்று நீ சொன்ன வசை சொற்கள்
இன்றும்  இன்னிசையாய் என்னை மயக்கியது

நீ அருகில் நின்ற போதும்
ஆறாத தேக தாகம்

உன்னை மறைந்து ரசித்த பொது
தீர்த்தது உள்ளத்தின் தாகத்தை

காணாத பல நாட்கள் போயினும்
காணும் வரை காதிருக்கத்தொன்றும்

காதிருபத்தின் வலி வேதனைதான்
ஆயினும் கோவம் இல்லை காதல் மட்டுமே

உன் தோழியிடம் நீ சொன்ன
குறும்பு பேச்சுக்கள் கேட்டபோதெல்லாம்

எனக்காக அவளிடம் நீ தூது
சொன்னாயோ என்று நினைத்தேன்

என்று நான் உன்னிடம் சொல்வது
என்றுமே சொல்வதில்லை என் காதலை 

Monday, December 22, 2014

உள் ஒளி

கண்டேன் கண்டன பல கற்றேன்
கற்றேன் கேட்டவை பல கண்டேன்

மூடனாய் நின்றோருடன்
மூடனாய் நான் ஆக

விஷமியாய் நின்றவரிடம்
விஷமியாய் நான் மாற

மதியோனுடன் நான் சேர
மதியுடையான் ஆனேனே

அவரவர்   சேர்க்கையால்
அவனவன் நான் ஆக

பூதத்தின் சேர்கையில்
கூடாய் இவன் ஆக

ஈசனாய் எறிந்த நின்
தீயாய் ஆவேனோ 

Thursday, December 11, 2014

ஆண்டான் ஆண்டபின்

அன்னமும்  ஆகுமோ  அமுதாய்
பசியும் ஆனது விரதமாய்
பயணம் என்பது யாத்திரையாய்
இசையோ அவன் மீது கீர்த்தனையாய்
இல்லோ கோவில் ஆகா
செயலே பிறர்க்கு சேவையாய்
ஆவது ஆனபின் மாறுவது
ஆண்டான் நினைவின் பயனால்
மனிதனும் மாறுவான் ஈசனாய் 

Thursday, November 27, 2014

காணாத கண்

கண்டவற்றை காண கண் இருந்தும்
காணாத ஓர் பொருள் நோக்க

மனத்தால் பெற்ற பழியை
கலங்கா நினைவு துடைக்க

வழிதான் தேடிச்சென்றும்
அறிவால் நின்றது தான் கலக்கம்

கண்கொண்டு கண்ட மாயை விலக
கண் இன்றி காண்பதே மெய்யாம் 

Monday, November 24, 2014

அவனும் அவளும்

நீரினில் சிக்கி மரணிக்கும் எறும்பை
காகக்கொன்றாள் ஒரு இலையை
துடித்தால்தான் உயிர் என்று அவள் நினைக்க
அவள்  நினைவில் நித்தம் துடித்தான்

ஒற்றை நாளில் மறிக்கும் மலரை
அரவணைத்த  அவளின் அன்பிற்கு
என்றும் அவள் நினைவில் வாழும் அவனை
அடையாளம்  காணத் தெரியவில்லை 

Saturday, November 22, 2014

எங்கோ தேடினேன்

அவனோ கண்டதையும் கண்டு
பின் கானா  இடம்  சென்றிருக்க
அவனை  எங்கே  தேடுவேன்

யாத்திரைகள்  பல  சென்று
கோ இல் பல தேடி
யோகம் பல கற்று
மந்திரங்கள் பல செய்து
நோன்புகள் பல கொண்டு
மூச்சையும் நன்கடக்கி
துறவும் ஏற்பட்ட பின்
காண இடம் அதை
எங்கே தேடுவேன்

செல்லா இடம் நோக்கி
செல்லும் பாதை கண்டபின்
சொல்லா வியப்பில் கண்டேன் கண்டேன்
யாதும் அவன் என்றால்
இடம் அது ஒன்றில்லை
பின் நானும் நான் இல்லை

Friday, November 21, 2014

ஒன்றில் கறைந்தேன்

சிலநாள் காத்திருந்தேன்
பலநாள் காத்திருந்தேன்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
பல திசை தேடினேன்
ஒரு நாள் ஓர் திசை 
உள் திசை சென்று
உந்தன் இசை கேட்டு
கொண்டேன் ஓர் ஆசை
அனைத்தும் மறந்தேன்

ஒன்றில் கறைந்தேன்

Thursday, October 23, 2014

பிரிவு

பிரிவும் அழகுதான்
இமைகள் பிரிவதால் பார்வை  பிறக்கிறது
உதடுகள்  பிரிவதால் மொழி பிறக்கிறது
ஓசை  பிரிவதால்  மௌனம் பிறக்கிறது
அறிவு பிரிவதால் ஞானம் பிறக்கிறது

Sunday, August 24, 2014

இன்று பிறந்த நாள்

வானம் ஜதி போட
புவி இசை பாட
மணம் கமழுது
மனம் மயங்குது

மழலை வாழ்துறைக்க
மழையோ உளம்  நனைக்க
பிறந்தது புது வருடம்
தேவை இறை இணக்கம்

Thursday, August 14, 2014

மழை மேல் காதல்

தனிமையில் பல இரவுகள் உனக்காக 
ஏங்கி பல கனவுகள் காண 

உன் தேக சுவாசம் நுகர 
உன் கால் அடி சத்தம் கேட்டு 

ஓடோடி வந்து உன்னை தழுவ 
தேகமே சிலிர்ததடி 

கண் இமைகளில் தவழ்ந்தோடி 
உதடுகளில் முத்தம் பதித்து

மார்போடு எனை அணைத்து
ஸ்பரிசம் எங்கும் நீ தழுவ

உள்ளம் நெகுழுதடி
உடலும் குளிருதடி

Wednesday, August 15, 2012

மதி கொன்று விதி வெல்வோம்


இறை தேட வந்தோமையா, இன்னும் ஏன்
நீ தந்தவற்றை தேடி அலைகிரோமோ!
விதியாய் நீ கொண்ட நாடகத்தை நான் 
சுமந்தேனே என்ற ஆணவத்தை
அழிதுவிடும்போது பிறந்ததோர் ஞானம்.
இறை சூட்சமம் அறிய வேண்டாம் ஐயா
என்னுள் நான் என்னை நீயாக காண வேண்டும் ஐயா 

Saturday, July 28, 2012

சித்தனாய் போனபின்னும் பித்தன் ஆவான்

உலகே வேண்டாம்  என்று காடு சென்று
இறை  தேடி சித்துக்களை கண்டு வென்று 

மீண்டும் உலகம் வந்து  இணைகின்றான்
சித்தன், சகிரவனை  வாழ  வைத்து 

தான்  வென்றதாய் சொன்ன  மாயையை 
மீண்டும்  அணைத்துக்கொண்டு 
மனிதனை மீண்டும்  மாயையில்  இணைக்கிறான்

பித்தனோ  இவன், தான்  கண்ட  இறைவனை
ஏன்  பிறர்  காண  வழி  காட்டாமல்

பிறர்  கண்ட  வேதனையை  தானும்  கண்டு
அதை  இதை  எதை என்று பல செய்து

இறைவனை  மறைத்தான், மாயையை  வளர்த்தான்
பின்  சிலையாய்  மறைந்தான் .

இதுவும்  இறை  செயல்தனோ!
சொல்லும்  ஐயா! என்னை  ஆட்சி  செய்யும்  இறைவனே!!!

Monday, April 25, 2011

நீ கேட்டதால்!!!

மானே தேனே என்று உன்னை அழைத்து
எட்டா பொருள் ஆக்கமாட்டேன்
உன்னை அலங்கரிக்க மொழி தேடி நின்றபோது
மொழியை நீ வந்து நின்றாயே.

பூ இடையே இருந்த வண்டு
மறைந்திருந்து
என் மெய் மறக்கவைக்கும்
உன் விழியாய் தொன்றிட்ரே

உன் உதடோர குரும்புச்சிரிப்பால்
ஏற்பட்ட கன்னக்குழியில் நான் வீழ்ந்து ,
எழும்ப வழி இருந்தும்
மோகத்தால் மனம் இல்லை.

மலர் கொண்ட மனம் அது
உன் நறுமணம் சூழ்ந்த வனம்
கிளையில் ஓடும் கோடி கண்டபோது
உன் சுருள் முடி மனதை கவரும்

உன் மழலை பேச்சு கேட்டபின்
இனி காதுகள் எதற்கு
உன் குழையும் சிணுங்கல் குரல் கேட்ட
செவிகள் வேறேதும் கேட்க மறுக்கும்

கடலும் சிறிதாய் தோன்ற இந்த
உலகும் சிறிதாய் போனதே,
என் வலி கண்டு நீ பொழிந்த
அன்பும் அரவணைப்பின் முன்

இறை காட்டிய பல விந்தைகளில்
உன் உறவு விந்தையிலும் விந்தை
மடை திறந்தார் போல் பொழியும்
அவன் அன்பில் நீயும் என் குழந்தை

For tounglish version
maane thene yendru unnai azhaithu
yetta porul aakka maatten
Unnai alangarikka mozhi thedi nindrapothu
mozhiyaai nee vanthu nindraye.

Poo idaiye inruntha vandu,
marainthirunthu
yen mei marakkaveikum
un vizhiyaai thondrittre.

un uthadora kurumbu sirippaal
yerpatta kanna kuziyil naan veeznthu,
yezhumba vazhi irunthum
moghatthaal, manam illa.

malar konda manam athu
un narumanam soozntha vanam
kilaiyil oodum kodi kandapothu
un surlu mudi manathai kavarum

un mazhalai pechu kettapin
ini kathukal yetharu
un kuzhaium sinungal kural ketta
sevigal verethum ketka marukkum

kadalum sirithai thondra intha
ulagum sirithai ponathe,
yen vali kandu nee pozhintha
anbum aravanaippin mun

irai kaatiya pala vinthaigalil
un uravu vinthailum vinathi
madai thiranthaar pol pozhium
avan anbil neeum yen kuzanthai

Friday, April 22, 2011

ஏன் இத்தனை கேள்வி

இருந்தாலும் மறைந்தாலும் நீயும்
நானும் அதுவாகவே இருக்க
அவனே வந்தாகினும் ஏதும் மாறப்போவதில்லை
விதியின் வழிதான் நாடகம் என்றபின்
முடிந்த பின்னும் ஒன்றும் விளங்கப்போவதில்லை!
ஏன் வாழும்போது மட்டும் இத்தனை கேள்வி.

Monday, March 7, 2011

தினம் ஓர் மகளிர் தினம்

செல்லப்புன்னகை கொண்டு மயக்கி,
மனம் கவர்ந்த மழலையாய்,

வெகுளியாய், ஆனந்தமாய், அழகாய்
குரும்புச்சேட்டைகளின் அரசியாய்,

வைரம் போன்ற ஒளியுடன்
தன்னை உணர்ந்த நங்கையாய்

உறவுகள் பல பெற்றும்
அவன் ஒருவனின் காதலியாய்

பொறுப்புகள் பல பெற்றும்
தலைவன் தோள்கொடுக்கும் தலைவியாய்

செல்வத்தின் செல்வமாம் மக்கட்செல்வம்
கண்டறிந்து பூரித்த அன்னையாய்

மக்கள் யாவரும் பிரிந்தபின்
கணவனின் உற்ற தோழியாய்

மறிக்கும் தருவாயிலும் தான்
இளமையில் பூரிக்கும் கிழவியாய்

பெண்ணே!
என் அன்னையாய் குழந்தையாய்
தங்கையாய் தோழியாய் தலைவியாய்
இன்னும் எத்தனையோ பரிமாணம்

உன் நினைவில் ஒருநாள் போதாது
வருடம் முழுதும் வாழ்த்துகிறேன்