Monday, February 23, 2009

தொடறட்டும் புனிதப்போர்

போர்க்களம் சென்றேன் - போர் வீரனாக 
அல்ல அதன் கொடுமை அறிய. 
எல்லாம் ஓர் நிறம் - சென் நிறம்.  

நேற்று என்னுள் ஓடிய குறுதி இன்று 
ஓடிக்கொண்டிருக்கிறது - 
ஊரெங்கும் ஆறாய் 

வீதி எங்கும் உரையாய் இருந்தது என்னுள்ளோ 
அது உரையத்துவங்கி விட்டது. 
அங்கு! அவனை நான் அறிவேன்.  

என் தோழன் ஒரு பக்கம், அருகில் 
பகைவன் - அவர் இருவரும் ஒரு பக்கம் 
நான் அமைதியின் பக்கம்!  

நம் குறுதி வேவேராகினும் இங்கு அது 
ஒன்றாய் கலந்து விட்டது - உயரின் 
பிறிவில் இணைகிறோம்.  

சற்றே நகர்கிறேன்! ஒரு சடலம் கைதூக்கி 
என்னை பார்க்கிறது; 
அவனை எனக்கு தெரியும்!  

சிதைந்த முகத்தில் துயருடன்
சிரித்தான் கொடுறமாக! நரகத்தின் வாயிலில்
நின்று என்னை வாழ்த்தினான்.  

சட்டென்று உணர்ந்தேன்! நானும்
நரகத்தின் வாயிலில்! அவன் நிலை 
குலையும் முன், கதறினான்.  

அவன் வேண்டியதெல்லாம் இனி 
நிம்மதியான உறக்கம்! சிறிய 
அலட்சியத்தால் இந்த நிலை!  

இன்று நானும் ஒரு வீரன் கலப்படத்தை 
நீக்க - உணவிலோ நீரிலோ அல்ல  
உயிராய் உள்ள குருதியில்!

எய்ட்ஸ் என்ற போரில் அமைதி அல்ல - வீரம் அல்ல - ஒழுக்கம் வெற்றி தரும்- எளிதாய் நாம் கூடு அழிய போவது, அதை வாழும் வரை கௌரவிப்போம். நமக்கு நாமே கை கொடுப்போம். அழிவதற்க்கள்ள! அழிப்பதற்கு! தீ உறவால் வரும் கேட்டை உறவறுத்து வெற்றி கொள்வோம்!

1 comment: