Sunday, May 10, 2009

அன்றும் இன்றும்

வானில் ஒரு கருப்பு ஆடை அது
மழைக்கு அறிகுறி - அந்தக்காலம்!

எங்கும் பரவும் கருப்பு ஆடை அது
புகை மூட்டம் - இந்தக்காலம்!

சங்கொலி எழுந்தது வீரம் வளர்ந்தது
வெற்றியின் முழக்கம் - அந்தக்காலம்

சங்கிலி பறந்தது க்ரொதம் வளர்ந்தது
வெறியின் பழக்கம் - இந்தக்காலம்

மரம் பூத்தது கனி கனிந்தது சுவை
மிகுந்தது - அந்தக்காலம்

மரம் மருந்துண்டது கனி குன்றியது
நோய் பிறந்தது - இந்தக்காலம்

மண் சேர்ந்து மனை உயர்ந்தது
இல்லறமானது - அந்தக்காலம்

மண் சுருண்டு மனை மடிந்து
கொலைக்கலாமானது - இந்தக்காலம் 

வேற்றுமை மறைந்து ஒற்றுமை 
ஓங்கி அன்பு வளர்ந்தது - அந்தக்காலம் 

சுயநலம் வளர்ந்து வெறுப்பு ஓங்கி 
துயரம் வளர்ந்தது - இந்தக்காலம்

0 comments:

Post a Comment